• Sat. Apr 27th, 2024

பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் வாகனம் முற்றுகை

Byதரணி

Oct 12, 2022

கோவில்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட லிங்கம்பட்டி கிராம மக்கள் பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
கோவில்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட லிங்கம்பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடு இல்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் மனு அளித்தனர்.


இந்நிலையில் நேற்று (11.10.22) கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து பட்டா வழங்கப்படுவதாகவும் மாலை 4 மணிக்கு வரும்படி தகவல் அளித்தனர். இதை நம்பி நேற்று (11.10.22) மாலை 4 மணிக்கு ஏழை எளிய மக்கள் கைக் குழந்தைகளுடன் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் இரவு 8 மணி வரை காத்திருந்தும் தாசில்தார் சுசிலா கண்டு கொள்ள வே இல்லை. எந்த பதிலும் சொல்லாமல் இரவு 8 மணிக்கு அலுவலகத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த லிங்கம்பட்டி மக்கள் இன்று கோவில்பட்டி ஆவல் நத்தத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காக வருகை தந்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை, மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் அன்புராஜ் தலைமையில் மூப்பன்பட்டி காலனி அருகே சாலையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சிங்கம்பட்டி கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து மற்றும் மகளிர் அணி முத்துலட்சுமி, மணி பூங்கொடி மற்றும் லிங்கம்பட்டி மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *