• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தடுக்கிவிழுந்த நத்தம் விஸ்வநாதன் வீடியோ- சகுனமே சரியில்லையே?

ByA.Tamilselvan

Jul 8, 2022

வரும் ஜூலை 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தை பார்வையிடச்சென்ற நத்தம் விஸ்வநாதன் தடுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுக்குழு கடந்தமாதம் 23 ம் தேதி நடைபெற்றது. அதில் ஓபிஎஸ்.இபிஎஸ் தரப்பு மோதல் காரணமாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் வரும் ஜூலை 11 ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட முடிவு செய்யப்பட்டது. பொதுகுழுவுக்கு தடைவிக்க வேண்டும் ஓபிஎஸ் தரப்பு நீதி மன்றங்களை அனுக்கினார்.ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்துள்ளது நீதிமன்றம் .இந்நிலையில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. அந்தவகையில் அதிமுக பொருளாளராக தேர்வு செய்யப்படலாம் என் எதிர்பார்க்கப்படும் நத்தம் விஸ்வனாதன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பொதுக்குழு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய சென்றனர்.

அப்போது திடீரென் நத்தம் விஸ்வநாதன் தவறி விழுந்தார். மற்ற நிர்வாகிகள் பதறியபடியே அவரை தூக்கி நிறுத்தினர்.
நத்தம் விஸ்வநாதன் தடுக்கி விழுந்த சம்பவம் இயல்பானதாக இருந்தாலும் , இபிஎஸ் தரப்பில் சகுனம் சரியில்லையே என யோசிக்க வைத்துள்ளதாம்.