• Wed. Oct 16th, 2024

துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே அரசியல் பயணம்

ByA.Tamilselvan

Jul 8, 2022

துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே ஜப்பானில் இளம் வயதில் பிரதமரானவர். அவரது அரசியல் பயணம் ஜப்பானில் முக்கியமாற்றத்தையும் ,வளர்ச்சியையும் உருவாக்கியது எனலாம்.
ஜப்பானின் நரா என்ற நகரத்தில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே பங்கேற்றார்.
சாலைப் பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் ஷின்சோ அபே பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஷின்சோ அபேவை சுட்டார். இதில், அபேவின் முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.


இதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயக்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஷின்சோ அபே அரசியல் பயணம்..


அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் செப்டம்பர் 21 1954 ல்பிறந்தார் .1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். 1979ல் கோபே உருக்கு தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தார்.பின்னர் .1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.1982 ல் துவங்கிய அவரது அரசியல்பயணம் 2022 வரை நீண்ட வரலாறுகொண்டது.
. 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார் .இவரது கட்சி ஜப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர்.

பத்ம விபூசண் விருது பெற்ற போது


இவர் மிக இளவயதில் ஜப்பானிய பிரதமராகவும். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமர் ஆவார். இவருக்கு கடந்த ஆண்டுஇந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது .கடந்த 2012 முதல் 2020-ம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டு பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *