

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெறும் சிவராத்திரி பூஜைக்கு பாரம்பரிய மலை (பழைய படிக்கட்டுப் பாதை)பாரம்பரிய மலைப்பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்துபாரதிய ஜனதா மதுரை மாவட்ட தலைவர் சிவலிங்கம்,ஓபிசி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன்,இளைஞர் அணி மாநிலச் செயலாளர் வெற்றிவேல் முருகன், ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன்,திருமங்கலம் மண்டல தலைவர் மைக்குடி சரவணன் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் ஆகியோர் மலைப்படியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் முருகன் கோவில் வாசலில் உள்ள படிக்கட்டில் உட்கார்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தருணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜகவினரிடம் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது ..,திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் சிவராத்திரி வழிபாட்டிற்கு புதுப் படிக்கட்டில் மட்டும்தான் அனுமதிக்கிறார்கள்,பாரம்பரியமிக்க பழைய படிக்கட்டு பாதை வழியாக காசி விஸ்வநாதரை பார்க்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை அதற்குத்தான் இந்த தருணா போராட்டம் என்றனர்.

