குமரி மாவட்டத்தில் கடைமடைப் பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அரணாக இருக்கக்கூடிய பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் தேக்கி வைத்திருக்கும் நீரே விவாசாயத்திற்கு ஆதாரம். குமரி மாவட்ட விவசாயத் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், குமரி மாவட்டத்திற்கு முறையாக தண்ணீர் வழங்காமல், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அவரது அதிகாரத்தை பயன்படுத்தி ராதாபுரம் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். இந்தச் செயலை கண்டித்தும், பாஜக விவசாய பிரிவின் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன். பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெய்த மழையைப் பொருட்படுத்தாமல் கோஷங்களை எழுப்பினர். குமரி மாவட்ட கடைவரம்பு பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், ராதாபுரம் தாலுகாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டித்தும், பாசன கால்வாய்கள் முறையாக தூர் வாரததுமே, கடை வரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வராத நிலைக்கு, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜகவின் மாவட்ட பொருளாளர் முத்துராமன், பாஜகவின் மாநில செயலாளர் மீனதேவ் உட்பட, கட்சியின் பல்வேறு பொருப்பாளர்களும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.