

நேரு நினைவு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் மா.வே. இலக்கிய பிரியா சென்னை ஐஐடி.யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொள்ள கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தார். சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து கடந்த மே மாதம் தேர்வு செய்தது. இந்தியா முழுவதும் இருந்து இயற்பியல் கோடை பயிற்சி பெற 18 பேர் மட்டுமே தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் முனைவர் பு.அரவிந்த் அவர்கள் வழிகாட்டுதலின் படி எடை நிறமாலைமானி மூலம் அயனிகளின் நிறையை கணக்கிடும் ஆய்வு மேற்கொண்டார். நிறை நிறமாலைமானி அணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட துகள்களை அந்தந்த மின்சுமை அவற்றின் நிறை விகிதங்களில் உள்ள வேறுபாடுகளைப் பயன்படுத்தி பிரிக்கிறது. இது அணுக்களின் சரியான மூலக்கூறு நிறையை அளவிட பயன்படுகிறது.

இந்த முறையில் அயனிகள் வலிமையின் மின்சார புலத்தால் முடுக்கிவிடப்படுகின்றன. பின்னர் ஒவ்வொரு அயனிகலும் நிறமாலைமானி கருவியை அடைய எடுக்கும் நேரம் அளவிடப்படுகிறது. அயனிகள் அனைத்தும் ஒரே மின்னூட்டத்தைக் கொண்டிருந்தால், அவற்றின் இயக்க ஆற்றல் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, ஒவ்வொரு அயனியும் வேகம் அதன் நிறையை பொறுத்தது. இதன் மூலம் ஓர் இடத்தில் உள்ள தனிமங்களின் வகை மற்றும் நிறையை அறியலாம். இந்த உருவகப்படுத்துதல்கள் SIMION 8.0 மென்பொருளைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. இந்த ஆய்வு மூலம் கனமான நிறை கொண்ட அணுவை விட இலகுவான நிறை கொண்ட அணு அதிகமாக பிரிவடைதை கண்டறிந்தார்.

இந்த ஆய்வு செய்வதற்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 12, 000 ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இயற்பியல் உதவி பேராசிரியர் பி.ரமேஷ் அவர்கள் வழி காட்டினார். இந்த ஆய்வு மேற்கொண்ட மாணவியை கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, முனைவர் குமாரராமன் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறைத் தலைவர் கபிலன் ஆகியோர் பாராட்டினர்.
