• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் கோரிக்கைகள் குறித்து பாஜகவினர் மனு ..,

BySubeshchandrabose

Mar 9, 2026

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற மே 12 ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேர்த்திகடன் மற்றும் தரிசனம் செய்வதற்கு வருகை தருவது வழக்கம்.

கோயில் திருவிழாவில் பக்தர்களுக்காக ராட்டினங்கள், உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்கா நடத்துவதற்கான ஏலம் 3.35 கோடி அடிப்படை தொகையாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் யாரும் ஏலம் எடுக்க முன் வராமல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏலம் விடுவதில் முறைகேடு நடைபெற்று வருவதாக கூறி தேனி மாவட்ட பாஜகவினர் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து வீரபாண்டி கௌமாரி அம்மன் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் இந்து சமய அறநிலையத்தை செயல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு செயல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கோயில் திருவிழாக்களில் ராட்டினம் ஏலம் 3.35 கோடி ரூபாய்க்கு விடப்படுவதால் அதனை ஏலம் எடுக்கும் நபர்கள் அதிக விலைக்கு நுழைவு கட்டணம் வைக்கும் நிலை ஏற்படும் இதனால் சாமானிய பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்

பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் வணிக ரீதியாக மாறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருவதாக கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலையில் தங்களது கோரிக்கைகள் குறித்து செயல் அலுவலர் அலுவலகத்தில் பாஜகவினர் மனுவாக அளித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.