• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம்

Byவிஷா

Sep 15, 2025

பாஜகவில் இருந்து கூட்டணி தலைவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்தனர். சமீபத்தில் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் விலகினர்.
ஓபிஎஸ் – நயினார் நாகேந்திரன் இடையே கருத்து வேறுபாடு, எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல்கள் என கூட்டணியில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன.
டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நாளை செப்டம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழத்தில் கூட்டணி விவகாரங்கள், தேர்தல் வியூகம், தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.