• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாஜக வேட்பாளர் உதயகுமாரை பாசி மாலை அணிவித்து வரவேற்ற நரிக்குறவர் இன மக்கள்..,

ByS. SRIDHAR

Apr 20, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் அதிகாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி அவர் ரங்கம்மாள் சத்திரம்
வடசேரிபட்டி சிப்காட் முல்லூர் சத்திரம் வடவாளம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நிகழ்வில் ரங்கம்மா சத்திரத்தில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தவர்கள் தாங்கள் செய்த பாசி மாலைகள் அணிவித்து வேட்பாளரை வரவேற்றனர். நிகழ்வில் இந்த தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். மக்கள் சில கோரிக்கைகள் வைத்தனர் பின்னர் அவர் நான் ஜெயித்தவுடன் நிறைவேற்றப்படும் என்று தொகுதி வேட்பாளர் மக்களிடம் கூறினார்.