• Tue. Feb 18th, 2025

காளப்பட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி

BySeenu

Jan 24, 2025

கோவை காளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சர்வதேச கல்வி தினம், தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324- சி, கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர்கள் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் இணைந்து, சர்வதேச கல்வி தினம், தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம் ஆகியவற்றை முன்னிட்டு, காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் வேண்டுகோளை ஏற்று பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பிரியணி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவியும்,பள்ளியின் முன்னால் மாணவியும் ஆன சுப்பு செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
முன்னாள் மாணவர் லோகநாதன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் வினிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியை மாரிசெல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்…

ஃபேரா கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் மகாகவி பாரதியார் மண்டல தலைவர் லயன் செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ,லயன்ஸ் 324 சி மாவட்டம் இரண்டாம் துணை ஆளுநர் செல்வராஜ்,நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாஸ்கரன், பசிப்பிணி போக்குதல் மாவட்ட தலைவர் மெய்யழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வாக மாணவர்கள், ஆசிரியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வெஜ் பிரியாணி, முட்டை, மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோவில் கருப்ப கவுண்டர் அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் மாணவருமான சுகுமார், 8 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் முன்னாள் மாணவருமான விஜயகுமார், மற்றும் ஜி எஸ் டி ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்க முன்னால் தலைவர்கள் நந்தகுமார், ஹரீஷ் மற்றும் பொருளாளர் அட்மின் திவ்யதர்ஷினி, உட்பட லயன் சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.