• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதலமைச்சர் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழா..,

Byமுகமதி

Jul 15, 2026

முன்னாள் முதலமைச்சர் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு பள்ளிகள் தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளி கல்லூரிகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சந்தப்பேட்டை பகுதியில் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியரைக் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் ரமா ராமநாதன் தலைமையில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் கருப்பையா, ஆசிரியர் பாபு ஜான் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் முன்னிலையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று போட்டிகளிலும் போற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இது போன்ற தலைவர்களின் பிறந்தநாட்களைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக அது குறித்து போட்டிகள் அறிவித்து நடத்துவது என்பது வெறுமனே விழாக்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு தலைவர்களின் சிறப்புகளையும் அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கவும் உகந்ததாக இருக்கும் என்பதால் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து இலக்கிய பேரவையும் நூலகர் வாசகர் வட்டமும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் இனிமேலும் மற்ற தலைவர்களுக்கும் நடத்த இருப்பதாக கவிஞர் ரமா ராமநாதன் கூறினார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.