• Mon. Jan 20th, 2025

க்ளைமாக்சை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாசின் ஐந்து சீசன்களும் நிறைவடைந்த நிலையில், ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி வெர்சன் துவங்கப்பட்டது. இது 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை, முதலில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சினிமா ஷுட்டிங் வேலைகள் இருப்பதாக கூறி, பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிறகு அவருக்கு பதில் சிம்பு, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

57 நாட்களாக நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா விஜயக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், தாடி பாலாஜி, அபிராமி, தாமரை, நிரூப், பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஜுலி, சுருதி, சுஜா வருணி, ஷாரிக், அபினய் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். சதீஷ், ரம்யா பாண்டியன், சாண்டி மாஸ்டர், தீனா ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டனர். இதுவரை வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், தாடி பாலாஜி, அனிதா, சுஜா வருணி, ஷாரிக், அபினய், சதீஷ் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே ஏப்ரல் 9 ம் தேதி நடக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது!