

மலையாளத் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் காலை நொண்டி நொண்டி படம் முழுக்க நடித்து இருப்பார். தொடர்ந்து மரியான், சிறுத்தை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விநாயகன், ஒருத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், கேரளாவில் நடக்கும் மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விநாயகன், முதலில் மீ டூனா என்ன, ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்வதா? என கேட்டுவிட்டு, நான் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருக்கிறேன் என்று கூறினார்.
இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் இந்த பேச்சை பல நடிகர், நடிகைகள் கடுமையாக விமர்சித்தனர். கேரளாவில் உள்ள பல பெண் அமைப்பினர் விநாயகன் பேச்சு பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது என்றும். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இணையத்தில் அவருக்கு எதிராக பல கண்டன குரல்கள் பதிவாகின.
இந்நிலையில், நடிகர் விநாயகன் தனது ஃபேஸ்புக் பதிவில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக, அதன் தீவிரம் உணராமல் சில கருத்துகளைத் தெரிவித்துவிட்டேன். அதுதொடர்பாக ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இணையத்தில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகும், மீ டு இயக்கத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி, விநாயகன் மீது மாநில மகளிர் ஆணையத்தில், ஓபிசி மோர்ச்சா என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது.