• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன்கோயில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

Byp Kumar

Dec 5, 2022

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகே நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக வீர வசந்த ராயர் மண்டபம் முழுமையாக எரிந்து நாசமானது,இந்த நிலையில் அந்த பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் மேல கோபுரம் அருகே தற்காலிகமாக தியணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிரந்தரமாக கட்டிடம் கட்டித் தரவேண்டும் என தொடர்ந்து கோரிக்கையில் இருந்து வந்த நிலையில் கீழ சித்திரை வீதி மேல சித்திரை வீதி சந்திப்பு அருகே சுமார் 12 சென்ட் பரப்பளவில் ஒரு கோடியை 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக நிரந்தர தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இந்த பணிகளை ஓராண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது