காணொலி காட்சி மூலமாக வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் மற்றும் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அது மட்டுமின்றி அறையின் முன்புறம் பாரதியாருக்கு மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும் கூறி இருந்தார். அதன்படி சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக இந்த நிதியாண்டுக்கு ரூ.67,500-ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த பணிகள் இப்போது முடிவடைந்த நிலையில், பாரதியார் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டதுடன், மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதே போல பாரதியார் குறித்த நூல் ஒன்றையும் முதல்வர் , அமைச்சர்கள் வெளியிட்டனர்