

லிப்ஸ் ரோஜா இதழ் போல இருக்க,
தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் – 1 கப், வேசலின் – 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்.
முதலில் ஒரு கப்பில் ரோஜாவில் உள்ள காம்புகளை நீக்கி இதழ்களை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இந்த ரோஜா இதழ்களை கொஞ்சம் கொஞ்சமாக அம்மியில் சேர்த்து நன்றாக இடித்து கொள்ளுங்கள். பின்பு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், வேஸ்லின் – 1 ஸ்பூன், இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற்றி, லேசாக சூடேற்றிய பிறகு, அதில் அரைத்து வைத்திருக்கும் இந்த ரோஜா இதழ்களை போட வேண்டும். ஐந்து நிமிடம் மிதமான தீயில் இதை சூடேற்றி அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறியவுடன் வடிகட்டி சின்ன டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். சுலபமான முறையில் கெமிக்கல் இல்லாத லிப் பாம் தயாராகி விட்டது. உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
