
சருமத்தில் உள்ள கருமை நீங்க:
2 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை ஒரு பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கழுவவும்.வாரத்திற்கு 4-5 முறை என்று பயன்படுத்தி வந்தால் கருமை நீங்கும்.
கற்றாழை ஜெல் ஒரு சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும் பொருளாகும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கழுவவும். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சரும கருமை நீங்குவதோடு சருமம் மிருதுவாகவும் மாறும்.
சந்தன பொடி சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க கூடியது. எனவே உங்கள் உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை இது எளிதாக போக்கிடும்.