• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Aug 30, 2022

சருமப் பொலிவிற்கு பச்சை திராட்சை:

சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மிருதுவாகும்.
எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால் அரை டீஸ்பூன் பச்சை திராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.
பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.
காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.