வாயைச் சுற்றிலும் உள்ள கருமை நீங்க:
பப்பாளியில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவி புரியும். ஆகவே உங்கள் வாயைச் சுற்றி கருமையாக இருந்தால், நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் வாய் பகுதியைச் சுற்றி தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.