முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய்:
1 டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய், 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, இரண்டு மணி நேரம் கழித்து தலையை அலசி குளிக்க வேண்டும். ஆமணக்கு எண்ணெய் 2 டீஸ்பூன், அரை கப் கற்றாழை ஜெல். 1 டீஸ்பூன் துளசி தூள். 2 டீஸ்பூன் வெந்தயம் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்டாக்கி தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு தலையை அலசி குளிக்க வேண்டும்
வேப்ப இலைப் பொடி ஒரு ஸ்பூன், விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு தலையை அலசி குளிக்க வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும். இது மட்டுமின்றி முடி வளர்ச்சி, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.