• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அழகு ஓவியம் மோனாலிசாவின் அறிந்திடா மறுபக்கம்

Byகாயத்ரி

Mar 25, 2022

இவ்வுலகில் பல வரலாற்று ஓவியங்களை நாம் அறிந்திருப்போம். ஆனால் நம் நினைவில் நீங்கா இடம் பிடிப்பது என்னவோ ஒன்று இரண்டு தான். அப்படி ஒரு ஓவியம் இன்று வரையிலும் நின்று பேசும் ஒன்றாகவும், அதிக மர்மங்களை கொண்டதாகவும் இருந்து வருவது மோனாலிசாவின் ஓவியமே..! இந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கும் பல உண்மைகளை வெளிப்படுத்தவே இத்தொகுப்பு…

உலகமே மெச்சும் இந்த ஓவியம் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது வைக்கப்பட்டுள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் ‘லியொனார்டோ டா வின்சி’ (Leonardo Da Vinci) என்ற ஓவியர். இந்த ஓவியத்தின் ரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓவியம் ‘லியொனார்டோ டா வின்சி’ இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் ரகசியம் மற்றும் உண்மைகள் இன்று வரையிலும் பேசுப்பொருளாகிறது.

யார் இந்த மோனாலிசா? இவரை ஏன் டா வின்சி ஒவியமாக வரைய முடிவெடுத்தார்.? இந்த கேள்விகளுக்கு பின்னால் ஒரு சிறுகதை உள்ளது. வாங்க பாக்கலாம்… முதலில் டா வின்சி இந்த ஓவியத்தை வரைய 1503ல் துவங்கி பல நாடுகள் கடந்து, அங்கு பார்த்தவையெல்லாம் அவரின் ஓவியத்தில் சேர்த்துக்கொண்டே வந்தார். கிட்டதட்ட இந்த பயணம் 14 வருடம் சென்றது. அந்த பயணத்தில் பார்த்தவையெல்லாம் டா வின்சி ஓவியமாக தீட்டினார். இத்தனை காலங்கள் டா வின்சிக்கு தேவைப்பட்ட காரணம் என்னவென்று கேட்டால் அந்த ஓவியத்தில் ஓவியமாய் தோன்றிருக்கும் மோனாலிசா தான்.

பொதுவாக டா வின்சிக்கு ஒரு ஓவியம் தீட்ட சில நாட்களே போதும் ஆனால் இந்த ஓவியத்திற்கு செலவிட்ட நாட்கள் இவரின் வாழ்விலே அதிகமான நாட்களாக கூறப்படுகிறது. அப்படி இவ்வளவு நாட்கள் எடுத்தும் அவருக்கு இந்த ஓவியத்தை மேலும் மெருகேற்றிருக்கலாமே என்று தான் தோன்றியது. இந்த ஓவியத்தை முடித்ததும் ஃப்ரேன்க்கோயிஸ் (Francois) என்ற மன்னரிடம் ஒப்படைத்தார். ஏனென்றால் அவர்தான் இந்த ஓவியத்தை வரைய டா வின்சிக்கு செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த மன்னரிடம் மட்டுமில்லாமல் வேறு ஒரு மன்னரிடமும் இந்த ஓவியம் 200 வருடங்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின் தான் இது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நாம் எந்த இடத்தில் நின்று இந்த ஓவியத்தை பார்த்தாலும் அது நம்மை நோக்கி பார்ப்பது போல தான் இருக்கும், அந்த வடிவில் தான் டா வின்சி இந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.

இந்த மோனாலிசாவை வரைந்ததற்கான காரணங்களை தேடும்போது பல வருடங்களுக்கு முன் டா வின்சி தன் கைப்பட எழுதிய அவரின் டைரி கிடைத்தது. அதில் மோனாலிசாவின் கண்களை உற்று பார்த்தால் அதில் LV என்று இருக்கும். அது இந்த ஓவியத்தை வரைந்த டாவின்சியின் பெயர்தான். அதுமட்டுமின்றி இது தான் வரைந்த ஓவியம் என்று காட்டிக்கொள்ள ஒரு புறம் மோனாலிசாவையும் மறுபுறம் டாவின்சியின் முகத்தையும் பதித்தார். இதற்கு பின்னும் ஒரு விஷயம் உள்ளது.

மோனாலிசா எனும் லிசா கெரார்தினி (Lisa Gherardhini) ஒரு அழகான அடிமை பெண்ணாக வாழ்ந்து வந்தவர். அந்த காலத்தில் அடிமை பெண் என்றால் செல்வந்தர்கள் தன் வசம் வைத்து அவர்கள் தேவையை, இவர்களை வைத்து பூர்த்தி செய்துகொள்வார்கள். அப்படி ஒரு வாழ்வை தான் மோனாலிசா வாழ்ந்தார். இதனால் அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது. பின் மற்றொரு செல்வந்தர் லிசாவை அழைத்து செல்ல அவர் மீண்டும் கருவுற்றார். இதனை கலைக்க பல பேர் கூறியும் மோனாலிசா நிராகரித்து அது தன் குழந்தை என்று உறுதியாக நின்றாள். பின் ஒரு நாள் செல்வந்தர் டாவின்சியை அழைத்து மோனாலிசாவை ஓவியமாக வரைய உத்தரவிட்டார். மோனாலிசாவின் தைரியத்தையும், அவள் முகத்தில் இருக்கும் சோகம், உதட்டில் இருக்கும் புன்னகையை பார்த்து மெய் சிலர்த்தார் டாவின்சி. அந்த ஓவியம் வெறும் ஓவியமாக இல்லாமல் ஒரு உணர்ச்சி மிகுந்த ஓவியமாக தீட்டினார். இப்படிப்பட்ட பெண்ணின் முகம் இவ்வுலகிற்கு தெரிந்திட கூடாது என்பதற்காகவே டாவின்சி மோனாலிசாவுடன் தன் படத்தையும இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வு டாவின்சியின் மனதில் இடம் பிடித்ததாலோ என்னவோ இந்த ஓவியம் அனைவரின் மனதிலும் இன்று இடம் பிடித்துள்ளது.

டாவின்சி வரைந்த பல ஓவியங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் ஒரு பெண் மோனாலிசாவால் கிடைத்துள்ளது என்பதில் பெருமைக்கொள்ள வேண்டும். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் ஒருத்தி இருப்பால் என்று கூறுவார்கள் இந்த டாவின்சியின் வெற்றிக்கு பின்னால் மௌனம் சாதித்த பெண் மோனாலிசாவின் ஓவியம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…