• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Nov 6, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், உட்பட 11 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை,, நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் துலுக்கன் குறிச்சி வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் குழந்தை வரம் வேண்டியும் ,உலக மக்கள் நன்மைக்கவும், சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.