
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜூன் 23ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் தடை விலக்கப்பட்டு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
