• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை..!

Byவிஷா

Nov 2, 2023

கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.