• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு பேரணி..,

ByP.Thangapandi

Mar 26, 2026

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலையும் பாதுகாப்பாக நடத்தவும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் மக்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி வாக்களிக்கும் வண்ணம், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உசிலம்பட்டி காவல் சரக காவல்துறையினர் பாதுகாப்பு அடையாள அணிவகுப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் இந்த அணிவகுப்பு பேரணியை உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனையிலிருந்து உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் துவக்கி வைக்க உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேவர் சிலை, பேரையூர் ரோடு வழியாக சென்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.,