• Tue. Apr 30th, 2024

தி ரைஸ் அமைப்பின்12_வது தேசிய தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு…

தி ரைஸ் அமைப்பின் 12_வது தேசிய தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு.”ஓமானில் நவம்பர் 24,25,26 நாட்களில் நடைபெறுகிறது.

திரைகடல் ஓடியும்,திரவியம் தேடு. என்ற நம் முன்னோர்கள் கொண்ட முயற்சி இன்றும் 'கனல்' நிலையில் இருப்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக தி ரைஸ் அமைப்பின் 12_வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் பங்கேற்கும் மாநாடு எதிர் வரும் நவம்பர் திங்கள் 24,25,26, நாட்களில் "ஓமான்" நாட்டில் நடக்க இருப்பது குறித்து,

தி ரைஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி ஜெகத் கஸ்பாரை நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்த கேள்விகளுக்கு கிடைத்த தகவல்கள்,

தமிழகத்தில் சிறு குறு தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்ற பல தொழில் முனைவர்கள் தெரிவிப்பது. இங்கு போதிய சந்தை வசதி இருக்கிறது. ஆனால் தொழிலில் முதலீடு செய்ய போதிய பொருளாதார உதவிதான் அவசியப்படுகிறது என்ற நிலைக்கு நேர் எதிர் முறையாக “ஓமான்”நாட்டில் தற்போது போது உள்ள அரசு வெளி நாடுகளில் இருந்து ஓமான் நாட்டில் தொடங்கும் சிறு,குறு தொழில்களுக்கு,நிதி நிறுவனங்கள் எளிதாக கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது.இதனை தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் நடைபெறும் மாநாட்டில் 35 நாடுகளில் இருந்து தொழில் அதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் 500-ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடு தமிழ் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

கத்தார், சவுதி, அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் இருந்து தொழில் அதிபர்கள் பங்கேற்க உள்ளனர். ஓமன் நாட்டை மையமாக கொண்டு மீன்பிடித்தல்,மீன் பதப்படுத்தல்,மீன் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றிற்கும் இந்த மாநாடு மிக பெரிய வாய்ப்பை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையை எங்களது இந்த கூட்டு முயற்சி ஏற்படுத்தியுள்ளது என அருட்பணி ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *