• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

குமரி அ.தி.மு.க,வில்உள் குத்து. தளவாய் சுந்தரத்திற்கு எதிர்ப்பு.!?

குமரி மாவட்டத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில். கன்னியாகுமரியில் மட்டுமே அ.தி.மு.க., மீண்டும் களம் காணும் நிலையில்.ஏனைய சட்டமன்ற தொகுதிகளான நாகர்கோவிலில் பத்மநாபபுரம்
குளச்சல் விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜகவின் நேரடி போட்டி என்ற நிலையில். பாஜகவின் கூட்டணி கட்சியான த.மா.கா.கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி என்ற நிலையில். அ.தி.மு.க.,விற்கு ஒரே ஒரு தொகுதி
கன்னியாகுமரி அதில் வேட்பாளர் தளவாய் சுந்தரம் என்ற நிலையில்.

தளவாய் சுந்தரம் போட்டியிட்டால். அதிமுக உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் தளவாய் சுந்திரத்திற்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுவேன் என நாகர்கோவிலில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தெரிவித்தது.

அ.தி.மு.க., அம்மா ஆட்சியில் நான் நாகர்கோவிலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். இரண்டாவது முறை போட்டியிடும் போது கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன்.

அமைதியாக இருந்த என் மீது. தளவாய் சுந்தரம் பொய் வழக்கு போட்டார். அந்த வழக்கில் நான் குற்றமற்றவன் என நீதிமன்றம் விடுதலை செய்தது.

நாகர்கோவிலில் மாநகராட்சியில் என்னை, அல்லது என் மகளை மேயர் ஆக்குவதாக தளவாய் சுந்தரம் கட்சியினர் மூலம் என்னை கேட்டுக்கொண்டார்.

நான் பல கோடி செலவு செய்தேன் அ.தி.மு.க.சார்பில் 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஆனால் தமிழகத்திலே மாநகராட்சியில். அ.தி.மு. க உறுப்பினர்கள் அதிகம் உள்ளது நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டுமே.

நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியில்
தளவாய் சுந்தரம் மட்டுமே அ.தி.மு.க.சார்பில் போட்டியிட முயல்கிறார்.

தளவாய் சுந்தரத்திற்கு பதிலாக கட்சியின் எதாவது ஒரு கிளை செயலாளருக்கு கொடுத்தால் கூட நான் பணம் செலவு செய்து தேர்தல் வேலை செய்வேன்.
தளவாய் சுந்தரம் தான் மீண்டும் கன்னியாகுமரி சட்டமன்ற அ.தி.மு.க., வேட்பாளர் என்றால் அவரை எதிர்த்து நான் சுயேட்சையாக போட்டியிடுவேன். நான் வேறு எந்தக் கட்சிக்கும் போகமாட்டேன்,வேறு எந்த கட்சியின் கரை வேட்டியும் கட்டமாட்டேன்.

தளவாய் சுந்தரத்தை எதிர்த்து சுயேட்சையாக போட்டி இட்டு வெற்றி பெற்றதும்
அதிமுகவிற்குத்தான் எனது ஆதரவு என நாஞ்சில் முருகேசன் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.