• Tue. Mar 25th, 2025

கஞ்சா வியாபாரிகள் வங்கிக் கணக்கு முடக்கம்

ByA.Tamilselvan

Apr 26, 2022

கடந்த சில மாதங்களாக கஞ்சாவியாபாரிகளை பிடிக்க தமிழக காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் வருகிறது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி மற்றும் ஓடைப் பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதுக்கப்பட்ட 85 கிலோ கஞ்சா வை காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். இதுகுறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பூபா லன் (25), முரளிதரன் (41), விஜயன் (42), அருண்பாண்டி (26), கணேசன் (26), சரத் (22) ஆகியோரை கைது செய்த னர். அவர்கள் மதுரை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள் ஆறு பேரின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்கு, சொத்து விவரங்கள், வாகனங்கள் குறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். தேனி மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில் ஆறு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முரளீதரன் உத்தரவிட்டார். ஆறு பேரின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஒன்து பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. அவர்களதுசொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.