• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிஎஸ்ஐ தேவாலயம் முன்பாக,இருதய – நுரையீரல் புத்துயிர்ப்பு சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

BySeenu

Sep 29, 2026

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக, செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் 2026 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இருதய- நுரையீரல் புத்துயிர்ப்பு சிகிச்சை என்று அழைக்கப்படும் சிபிஆர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பந்தய சாலையில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மேலும் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம் குமார் ,தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்.. 2026 உலக இருதய தினத்தின் கருப்பொருளாக “டோன்ட் மிஸ் ய பீட் ” என்ற அடிப்படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திடிர் மாரடைப்பு அல்லது இருதய நிறுத்தம் ஏற்படும் சூழ்நிலைகளை அடையாளம் கண்டு அவசர நிலைகளில் விரைவாக செயல்பட்டு, சிபிஆர் வழங்குவதால், பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காக்க முடியும், என்றும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று செய்முறை விளக்கமும் அளிக்கபட்டது.

தொடர்ந்து சிபிஆர் அளிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் கூறியதாவது..

உயிரை காக்கும் சிபிஆர் நிகழ்ச்சி கோவையின் முக்கிய இடங்களில் இந்த வாரம் முழுவதும் இராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக நடத்த பட உள்ளது. குறிப்பாக பந்தய சாலை, கோவை சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம், செம்மொழி பூங்கா, பி.ஆர்.எஸ் மைதானம், மற்றும் கோவை மாநகரில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள், உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு நேரடியாக சென்று சிபிஆர் விழிப்புணர்வை கொண்டு செல்வதன் மூலம், சமூகத்தில் பல்வேறு தரப்பினரையும் சென்றடைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம், இதனை பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் நெட்வொர்க் என்ற அமைப்புடன் இணைந்து இதனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.