மதுரை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுநர் நலம் சங்கம் சார்பாக சட்ட விரோதமாக இயக்கப்பட்ட வந்த பைக் டாசிகளை அவர்களே புக் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர் மேலும் வட்டார போக்குவரத்து அலுவல்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகரத்தில் “Rapido Bike Taxi” என்ற கர்நாடகா மாநிலத்தை தலைமையகமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் மதுரையில் வாடகை கார்கள் இயங்குவது போல் Online Mobile App வழியாக பொதுமக்களிடம் www.apido.bhike என்ற Website மூலம் பொதுமக்களை தொடர்கொண்டு மோட்டார் வாகள் சட்டங்கள்/வீதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் நமார் 2000-த்திற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்கள் ஆக்கி மதுரை மாநகரில் அனுமதியற்ற வகையில் Bike Taxi – கள் இயக்கி வருவது தெரிந்து சுமார் 40-ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கத்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், அனீஸ்சேகர், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களின் அறிவுறைப்படி சட்டப்படி அங்கீகாரம் பெறாத “Rapido Bike Taxi” நிறுவனத்திடம் Mobile App வழியாக தொடர்புகொண்டு வாடகைக்கு இரண்டு சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள். மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர், பொன்செந்தில் நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்
சிங்கார வேலு, (தெற்கு), சித்ரா, (வடக்கு). ஆகியோர்களுடன் இணைந்து “Rapido Bike Taxi” வாகனத்தை பறிமுதல் செய்ய இன்று முடிவு எடுத்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பொதுமக்கள், இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை வாடகை Bikc Taxi-க்கு பயண்படுத்தக்கூடாது என எச்சரிக்கை கொடுத்துள்ளனர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்க தலைவர் கூறுகையில் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல் ஆணையாளரின் இந்த நடவடிக்கைக்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்கு அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர் இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என தெரிவித்தனர்…