

விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தை, அரசியல் நிலவரம், பிரச்சாரங்கள் என அனைத்து கட்சிகளும் மும்மூரமாக களப்பணியாற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் பட்டியல் என கட்சிகள் களப்பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கமலின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் இணைந்துள்ளது.
பாமக பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்கனவே ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ராமதாஸை சந்தித்து அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதேசமயம் பாஜக கூட்டணியில் பாமக-வுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்குவதாக பாஜக உறுதி அளித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை பாமக உடனான பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அணுக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

