• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பாலா – சூர்யா இணையும் படத்தின் அடுத்த அப்டேட்

Byமதி

Nov 25, 2021

நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் பாலா சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. சூர்யா தயாரித்து நடிக்க உள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இந்த படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகரை நடிக்க வைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் குறைந்த காட்சிகளே என்பதால் சூர்யாவை நடிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சூரியாவிற்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரியாவும் கீர்த்தி சுரேஷ்யும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இதற்குமுன் நடித்துள்ளனர்.