• Sat. Apr 20th, 2024

எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

Byமகா

Nov 15, 2021

பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச் ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை அவதூறாகவும் அவர்களது குடும்பத்தினர் பற்றியும் பேசியுள்ளார் இது தொடர்பாக துணை ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரிகரன் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் பஜார் போலீசார் 294 பி 353 மற்றும் 505/1பி
ஆகிய பிரிவுகளின் கீழ் அதாவது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும்
பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வாகவும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது

இந்த வழக்கில் சம்மனை பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் நடுவர் எண் 2 அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்றநீதிபதி பரம்வீர் பாரதிய ஜனதா கட்சி தலைவர் எச் ராஜாவுக்கு அக்டோபர் 7ஆம் தேதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார் கடந்த 27ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு இருந்தார் இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எதிராக ஆஜராகவில்லை

இந்நிலையில் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணையின்போது எச்ச ராஜா இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்

முன்னதாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் பெரிய பெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜரானது படங்களை போட்டு வர மாதிரி குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *