• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

Byமகா

Nov 15, 2021

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் ,பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 16ஆம் தேதி முதல் 19 தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.