• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

ByN.Ravi

Mar 26, 2024

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இவர்கள் சோழவந்தானில் உள்ளஐயப்பன் கோவிலுக்கு வந்து தினசரி பஜனை பாடல் பாடி விழாக்களில் கலந்து கொண்டு இரவு நேரங்களில் விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே இப்பகுதி கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பாகஐயப்பன் ஆலயம் ஏற்படுத்தினர். இதிலிருந்து ஆண்டுதோறும்விக்கிரமங்கலம் அய்யப்பன் ஆலயத்தில் ஐயப்பன் சம்பந்தப்பட்ட அனைத்து விழாக்களும் நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஆராட்டு விழாவும் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு 18 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனை,ஆராதனை நடைபெற்றது.குருநாதர் ஆர்.கே சாமி அருட்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கினார். அன்னதான வழங்கப்பட்டது. விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.