தமிழுடன் ஆங்கிலத்தைக் கலந்து பேசும் இளம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் தமிழ்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதைய இளம் தலைமுறை தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அவ்வாறு தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவதை இளம் சமுதாயம் தவிர்க்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் மணிவண்ணன் ஒரு பாடல் ஒன்றை எழுதி அதை வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலில் தமிழை உடைத்து ஆங்கிலம் புகுத்தி ஆங்கிலம் பேசும் தமிழா அமுதினும் உன் மொழி அழிவது தெரியலையா என்ற பாடலைப் பாடி வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வினியோகிக்கப்பட்டு மாணவ மாணவிகளிடம் தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தை புகுத்தி பேசுவதை தவிர்க்க நீலகிரி தமிழ் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் சங்கத்தின் 25வது ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த பாடல் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.