• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரன்பீர் – ஆலியா பட் திருமணம் ஒத்திவைப்பு!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்தச் சூழலில் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இவர்களது திருமணம் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது என தகவல் வெளியானது. இதனை ஆலியா பட்டின் உறவினர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி மெஹந்தியுடன் திருமண விழா தொடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், திருமண தேதி முன்கூட்டியே கசிந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மீண்டும் திருமண தள்ளி போயுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆலியாவின் சகோதரர் ராகுல் பட், “ஏப்ரல் 14ஆம் தேதிதான் திருமணம் நடப்பதாக இருந்தது. இப்போது திருமணம் அந்த நாளிலிருந்து வேறு ஒரு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனேகமாக 17ஆம் தேதி வரவேற்பும், 20ஆம் தேதி திருமணமும் நடக்க வாய்ப்புகள் அதிகம்” என கூறினார்.

திருமணம் ஆர்.கே. ஹவுஸிலும், வரவேற்பு நிகழ்ச்சியானது மும்பையில் இருக்கும் தாஹ் மஹால் பேலஸிலும் நடைபெறும் என தெரிகிறது. இந்தத் திருமணத்தில் கரண் ஜோஹர், ஷாருக்கான், சஞ்சய் லீலா பன்சாலி, அகன்ஷா ரஞ்சன், அனுஷ்கா ரஞ்சன், ரோஹித் தவான், வருண் தவான், ஜோயா அக்தர் என ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.