• Thu. Apr 25th, 2024

பொள்ளாச்சியில் போதைப்பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு..!

பொள்ளாச்சியில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயந்தி உத்தரவின் பெயரில் மதுவிலக்கு அமலாக்கத் துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் அறிவித்தலின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மீனா ப்ரியா தலைமையில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகதுண்டு பிரசுரங்கள்பொது மக்களுக்கு வழங்கினர்.

பொதுமக்கள் மத்தியில் ஆய்வாளர் மீனா பிரியா கூறுகள் தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மதுவிலக்கு போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கும் விதமாக தமிழக கேரளா எல்லையில் தீவிர வாகனசோதனையும் செய்து வருகிறோம்.

சமுதாய நலன் கருதி பொதுமக்கள் வீட்டின் நலன் கருதி குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் எனவும் வாகனங்களில் செல்லும்போது குடிபோதையில் இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு தங்களது குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்படும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தெரிவித்தார். இதில் உதவி ஆய்வாளர் சுரேந்தர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *