• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

6 நாட்கள் வங்கிகள் விடுமுறை-ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Byகாயத்ரி

Dec 23, 2021

டிசம்பர் மாதம் முடிய இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. சில இடங்களில் பிராந்திய அளவில் மட்டுமே விடுமுறை இருக்கும். உதாரணமாக, யூ கியாங் நங்பா பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி சில்லாங் பகுதியில் மட்டும் விடுமுறை.

ஆனால் இதே பண்டிகைக்காக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. எனவே பிராந்திய அளவில் மாநில அளவில் வங்கி விடுமுறை மாறுபடும்.டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ்,டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்,டிசம்பர் 26 – ஞாயிறு, டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், டிசம்பர் 30 – யூ கியாங் நங்பா, டிசம்பர் 31 – புத்தாண்டு தொடக்கம். வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதன்படி திட்டமிட்டு பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால் வீண் அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

அதே நேரத்தில் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.