


மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் இன்று மதுரை ரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது இருபுறமும் வாகனம் வருகிறதா என்று பார்த்து கவனமாக செல்ல வேண்டும் எனவும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை மிதமான வேகத்தில் நகரில் இயக்க வேண்டும்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் சாலையில் கிடக்கும் பொழுது நீங்கள் வேகமாக வந்தால் அவர்கள் மீது மோதி விபத்துக்கள் ஏற்பட உயிரிழப்புகளும் படுகாயங்களும் ஏற்பட அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
பேருந்தில் பயணம் செய்யும் பொழுது பேருந்து நின்ற பின்னே பேருந்தில் பின்புறம் வாயிலாகவே இருந்து இறங்க வேண்டும்.

ஏறும் பொழுது முன் பகுதியில் ஏற வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை பயணிகளுக்கும் பாதசாரிகளுக்கும் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வழங்கினார் இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது இது போன்ற விழிப்புணர்வை இவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் இப்பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் இருக்கிறது இவரது முயற்சிக்கு பொதுமக்கள் அதிக அளவு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

