• Fri. Apr 26th, 2024

ஆவின் பொருட்கள் விலை உயர்வு… கே.டி.ராஜேந்திர பாலாஜி மௌனம் சாதிப்பது ஏன்..??

Byதரணி

Jul 21, 2022

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 200 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 500 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாயும், ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீதம் வரி விதித்ததால் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டதாக ஆவின் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் இந்த விலை உயர்வு இருப்பதாகவும்,இது பல தரப்ட மக்களின் அத்தியாவசியமாக இருக்கும் படசம் இத்தகைய விலை உயர்வு அவசியமா என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த பொருட்களின் மீதான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான கே.டி. ராஜேந்திர பாலாஜி இதை பற்றி எந்த அறிக்கையும் விடவில்லை. இதை பற்றி கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏன் இந்த மௌனம்…?? திமுக ஆட்சியை கண்டு பயந்துவிட்டாரா..?? அல்லது வேறு ஏதேனும் காரணமா…?? முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவருக்கு இந்த வரி உயர்வு தேவையா.. இல்லையா என்று கூட மூச்சே விடவில்லை… இனியாவது இதைபற்றி பேசுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *