• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் பறவை காய்ச்சல் -எல்லையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலையொட்டி அங்கிருந்து வரும் வாகனங்கள், அனைத்திற்கும், வாகன சக்கரத்திற்கும், கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து கோழிகள், மற்றும் முட்டைகளை திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றது.


நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லைக்குட்பட்டு ஏழு வாகன சோதனை சாவடிகள் உள்ளது. வாகன சோதனையின் போது நீலகிரி மாவட்ட மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் அறிவுறுத்தலின் படி கால்நடை ஆய்வாளர் ஜீவா தலைமையில் அனைத்து வாகன சோதனை சாவடிகளிலும் முழுமையாக சோதனைக்கு பின்னரே வாகனங்கள் தமிழக எல்லைக்கு அனுப்பப்படுகின்றன.தொடர்ந்து எல்லா வாகன சோதனை சாவடிகளிலும் துணை மருத்துவர் மற்றும் கிருமி நாசினி தெளிப்பதற்காக பணியாளர்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார் இந்த பணியானது மூன்று மாதத்திற்கு தொடர்ந்து நடைபெறும் எனவும் இதன் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.