நடிகை ரைசா வில்சன் மாடலிங் மூலம் தன் கெரியரை தொடங்கினார். அதன் பின் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்.
இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்ற நிலையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். அந்த புகைப்படத்தில் ரைசா வில்சன் மேக்கப்புடன் பிங்க் நிற ஆடையில் நீச்சல் குளத்திற்குள் இருக்கின்றார். இப்புகைப்படத்தை பார்த்த இணையதள வாசிகள் கமெண்டுகளில் பாசிட்டிவான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.