• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயம்

BySeenu

Dec 23, 2023

உக்கடம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில்
ஆட்டோ டிரைவர் ஆதில் உசேன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி உக்கடம் கரும்பு கடை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் போக்குவரத்து காவலர்கள் இதனை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.