• Thu. May 9th, 2024

நேற்று சென்னை, இன்று நெல்லை நாளை எங்கே மழை வரும் என்ற மனநிலையில் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்

BySeenu

Dec 23, 2023

அரசு நடவடிக்கை எடுத்தால் மழை வெள்ளம் பாதிப்பை தடுக்கலாம். கோவை போத்தனூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கில் பல்வேறு சாதிக் கட்சியினர் மற்றும் சாதி அமைப்பினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசி அன்புமணி ராமதாஸ்..,

தமிழ்நாடு, கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். அப்பொழுது ஆந்திராவில் நடத்தி வருகிறார்கள். தெலுங்கானாவில் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

பீகாரில் சாதிவாரி கணக்கு எடுத்த 60% இருந்து 75% உயர்ந்துள்ளது. அதுவாரி கணக்கெடுப்பிற்கும் மக்கள் தொகை கணப்படுத்தவதற்கும் தமிழக முதல்வருக்கும் வித்தியாசம் தெரியும். ஆனால் தெரிந்தும் அதிகாரம் இல்லை என்று வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்திற்கும் சாதி வாரி கணக்கெடுக்க வேண்டும். அனைத்து சமூகத்தின் அடிப்படை வசதிகளை கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் அடித்தள மக்கள் முன்னேறினால் மட்டுமே தமிழகம் முன்னேறும் தொழிற்சாலைகள் கொண்டு வந்தால் மட்டுமே தமிழகம் முன்னேறாது என்று விமர்சனம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் சாதிவாரி கணக்கு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.மத்திய அரசு தான் சாதி வாரி கணக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.

சாதி வாரி கணக்கை எடுக்கவில்லை என்றால் சமூக நீதி தந்தை பெரியார் பற்றி பேசக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். 13 கோடி மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலம் சாதி வாரி கணக்கு எடுத்து உள்ளது. ஆனால் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் இன்னும் சாதி வாரி கணக்கெடுக்கவில்லை.

சாதி வாரி கணக்கெடுக்க வில்லை என்றால் தமிழகத்தில் அனைத்து சமூதாய மக்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.

சென்னையில் வெள்ளம் வந்தால் நெய்வேலியில் இருந்து பம்பு செட் கொண்டு போய் மழை நீரை அப்புறப்படுத்துகிறார்கள்.ஆனால் திருநெல்வேலி,தூத்துக்குடியில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை மக்கள் உணவுக்கு வழியாமல் தவித்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் தங்கி பார்த்தால் தான் மக்களின் பிரச்சினை முழுமையாக தெரியும் என்று கூறினார்.நேற்று சென்னை, இன்று நெல்லை நாளை எங்கே மழை வரும்?? என்ற மனநிலையில் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்.தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மழை நீர் வெள்ள பாதிப்பை தடுக்கலாம் என்று கூறினார்.

மத்திய அரசு உடனடியாக 2000 கோடி ரூபாயை தென் மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் தென் தமிழகம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எடுக்கவில்லை என்றும் மழைநீர் வடிகால் பணிகளை திட்டமிடாதால் இதுபோல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு எது குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது மின்சார கட்டண உயர்வால் சிறு,குறு தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளனர்.சிறுகுறு தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.அதேபோல மேகதாது அணை கர்நாடகா அரசால் கட்ட முடியாது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *