சௌமியா அன்புமணி மீது பாய்ந்தது வழக்கு… தடையை மீறியதால் போலீஸ் நடவடிக்கை
சென்னையில் காவல் துறை தடையை மீறி போராட்டம் நடத்திய சௌமியா அன்புமணி உள்பட 297 பாமகவினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம்…
நடுரோட்டில் திடீரென கவிழ்ந்த கேஸ் டேங்கர் லாரி… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை
டேங்கர் லாரி கவிழ்ந்து கேஸ் வெளியேறி வருவதால், கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலம் ரவுண்டானாவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் இயங்கும்!
பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், விடுமுறை தினமான ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…
முகுந்தன் தான் பாமக இளைஞர் அணித்தலைவர்… டாக்டர் ராமதாஸ் தடாலடி!
“முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக, சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை…
விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்… பாமகவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனக்கூறி பாமக தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் ஞானசேகரன்…
பொதுமக்களுக்கு எச்சரிக்கை… 7 மாவட்டங்களில் வேகமெடுக்கும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பாக்டீரியா
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில்,” ‘ஸ்க்ரப்…
போலீஸ் தடையை மீறி போராட்டம்… டாக்டர் அன்புமணியின் மனைவி கைது
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா பல்கலைக் கழக…
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் ரெடி… நாளை முதல் வீடுவீடாக வழங்க ஏற்பாடு
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளை முதல் வீடு, வீடாக வழங்க உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை…
தாய், 4 சகோதரிகள் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞன்… வீடியோ எடுத்ததும் அம்பலம்
உத்தரப் பிரதேசத்தில் தாய் மற்றும் 4 சகோதரிகளை பிளேடால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் அர்ஷத்( 24). இவர் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.. இவருக்கு 4 சகோதரிகள் இருந்தனர்.…
நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள…





