பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனித்துவமான குரல் வளத்தால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். மலையாளம்,, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி, ஒரியா,…
பராமரிப்பு பணி காரணமாக 16 மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக இன்றும், மார்ச் 1-ம் தேதியும் சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை…
ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: இங்கிலாந்து வெளியேற்றம்!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது. எட்டு நாடுகள் பங்கேற்கும் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள…
66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நிறைவு!
66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த கும்பமேளா 2169-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள்…
பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி – மு.க.ஸ்டாலின் உத்தரவு
ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,920 டன் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு விருப்பமில்லை – டாக்டர் ராமதாஸ்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த திமுக அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த…
அம்பேத்கரை விட பிரதமர் மோடி பெரியவரா?: டெல்லி சட்டப்பேரவையில் கடும் அமளி
அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கி விட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் ஆதிஷி உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சட்டப் பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. பாஜக மற்றும்…
தென் கொரியாவில் திடீரென பாலம் இடிந்து 3 பேர் பலி: 5 பேரின் நிலை கவலைக்கிடம்
தென் கொரியாவில் கட்டுமானப்பணியின் போது பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் கொரியா தலைநகர் சியோலில் இருந்து தெற்கோ 90 கிலோ மீட்டர் தொலைவில் அன்சியோங் நகர் உள்ளது.…
இது இன்பத் தமிழ்நாடு, ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
இந்தி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம் உயிர்நிகர்த் தலைவர்…
ஸ்டாலின் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை: ஈபிஎஸ் குற்றச்சாட்டு
இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் கூறியுள்ளார்.. இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும்,…












