கொரோனா பாதிக்கப்பட்டோருக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை திட்டம்
உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலபடுத்தப்படுகிறது. இந்நிலையில்,…
நீட் விலக்கு சட்டம் குறித்த கூட்டம் அறிவித்துள்ள முதல்வர் முடிவு வரவேற்கத்தக்கது – ராமதாஸ்
12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்று பா.ம.க.நிறுவனத்…
போட்டித்தேர்வுகளுக்கு செல்வோருக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி
கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி/ டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட…
நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும்…
மிரட்டும் கொரோனா…இன்று 1 லட்சத்தை எட்டியது
இந்தியாவில் இன்று ஒரேநாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.…
வாகா எல்லைப் பகுதியில் பொதுமக்களுக்கு தடை
இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்பு படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி அட்டாரி –…
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று..!
புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் என்றால் நம் நினைவில் வருவது ஏ.ஆர்.ரகுமான் . மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து இசைப்புயல், ஆஸ்கர் நாயகன்…
உ.பி. யில் காங்கிரஸ் பேரணிகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உத்தரப்…
கிராமி விருதுகள் விழா ஒத்திவைப்பு
ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக ஜனவரி 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராமி விருதுகள் விழா ஒத்திவைக்கப்பட்டது. சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது.
84 வயது முதியவர் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். 12-வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்றபோது பிடிப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-பிரம்மதேவ் மண்டல்,…








