• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உ.பி. யில் காங்கிரஸ் பேரணிகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து

Byகாயத்ரி

Jan 6, 2022

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாரத்தான் போட்டிகள், பிரசார பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.