• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஆட்யோ லான்ச்

அறிமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் உருவாகும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் இன்று நடைப்பெற்றது . இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் தீரன் கூறுகையில், சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ‘வெட்னஸ்டே பட பாணியில் உருவாகும் திரைப்படமே இது. படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது என்று கூறியுள்ளார்.இந்தப் படத்திற்கு பிரசாத் இசையமைக்கிறார். படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.